திருப்பலி நேரம்
Sunday 8.00AM-9.00AM
பிலிப்பு நேரியார் ஆலயம்

Tuesday 5.00PM-6.00PM
அந்தோனியார் ஆலயம்

Friday 5.00PM-6.00PM
பிலிப்பு நேரியார் ஆலயம்

புதிய ஏற்பாடு

பழைய ஏற்பாடு

சங்கீதம்

நற்செய்தி
இன்றைய சங்கீதம்
Verse of the day: சங்கீதம் 85:12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
ஆலய மூப்பர்கள்
விசுவாசம் 1936 - 1960
கபிரியேல் 1960 - 1963
முத்துவேல் 1963 - 1970
நட்சத்திரம் 1970 - 1990
பிலேந்திரன் 2008 -

1453509_609852085747596_1298330345_nஜனாதிபதியின் யாழ்.விஜயத்தினை முன்னிட்டு இராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தினை முன்னிட்டு யாழ்.மாவட்டத்தின் முக்கிய நகர்ப்புறங்கள், ஜனாதிபதி செல்லும் இடங்கள் என அனைத்து இடமும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஏ9 வீதியில் இருமருங்கிலும் இராணுவம் நிலை நிறுத்தப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்பட்டுள்ளன.
வாகனங்களில் கொண்டு வரப்பட்டு யாழ்.நகரங்களில் பல இடங்களில் இராணுவத்தினர் குழுக்கள் குழுக்களாக இறக்கி விடப்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

சில இடங்களில் இராணுவத்தினர் பொது வேலைகளிலும் சிரமதானத்திலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் அவதானிக்க முடிந்ததோடு பிரதான வீதிகளுக்கு அருகிலுள்ள பழைய கட்டடங்கள் என்பவற்றுக்கும் இராணுவத்தினர் வர்ணம் தீட்டியதனையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை அதிகரித்த இராணுவ நடமாட்டத்தால் யாழ்.மக்களிடையே ஒருவித பய உணர்வும் ஏற்பட்டுள்ளதனையும் அவதானிக்க முடிந்தது.

அல்லைப்பிட்டி பராஷக்தி வித்தியாலயத்தின் 2014ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர்  போட்டி இன்று[செவ்வாய்க்கிழமை] நண்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது.அல்லைப்பிட்டி சென்பிலிப்ஸ் விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றன.